முத்தையா முரளிதரன்
தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | முத்தையா முரளிதரன் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பட்டப்பெயர் | முரளி தரன் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | வலக்கை-மட்டையாளர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | வலக்கை ஓஃப் சுழற்பந்து வீச்சு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பங்கு | பந்து வீச்சாளர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தேர்வு அறிமுகம் (தொப்பி 54) | ஆகஸ்ட் 28 1992 எ. ஆத்திரேலியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசித் தேர்வு | ஜூலை 12 2010 எ. இந்தியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப அறிமுகம் (தொப்பி 70) | ஆகஸ்ட் 12 1993 எ. இந்தியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி ஒநாப | ஏப்ரல் 2 2011 எ. இந்தியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப சட்டை எண் | 08 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உள்ளூர் அணித் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆண்டுகள் | அணி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
1991–- | தமிழ்ச் சங்கம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
1999–2007 | லங்காசயர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2003 | கெண்ட் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2008 | சென்னை சூப்பர் கிங்ஸ் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், 7 February 2011 |
முத்தையா முரளிதரன் (Muttiah Muralitharan, பிறப்பு: ஏப்ரல் 17, 1972, கண்டி) பொதுவாக முரளி என்றும் அழைக்கப்படுகிறார். இலங்கையின் மலையகத் தமிழரான இவர் இலங்கைத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஆவார். 2002 ஆம் ஆண்டில் விசுடன் துடுப்பாட்டாளர்களின் நாட்குறிப்பானது இவரை தேர்வுத் துடுப்பாட்ட வரலாற்றில் மிகச்சிறந்த பந்து வீச்சாளர் எனக் குறிப்பிடுகிறது.
தேர்வு துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி 800 இலக்குகளை (விக்கெட்டுகளை) வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.[1] சூலை 22, 2010 ஆம் ஆண்டில் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார். ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத்திலும், தேர்வுத் துடுப்பாட்டத்திலும் அதிக இலக்குகளை வீழ்த்தியவர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியத்தின் துடுப்பாட்ட காட்சியகத்தில் இடம்பிடித்த ஒரே இலங்கைத் துடுப்பாட்ட அணி வீரர் ஆவார்.[2] தெரன தொலைக்காட்சி வழங்கும் 2017 ஆம் ஆண்டிற்கான சிறந்த இலங்கை வீரர் விருதினைப் பெற்றார்.[3]
பெப்ரவரி 5, 2009 ஆம் ஆண்டில் இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக விளையாடிய போது கவுதம் கம்பீரை வீழ்த்திய போது பாக்கித்தான் துடுப்பாட்ட அணியின் முன்னாள் வீரரான வசீம் அக்ரமின் சாதனையான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் 502 இலக்குகள் எனும் சாதனையை முரளிதரன் முறியடித்தார்.[4] தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் அதிக இலக்குகளைப் பெற்ற ஷேன் வோர்ன் சாதனையை டிசம்பர் 3, ,2007 ஆம் ஆண்டில் முறியடித்தார்.[5][6]
சராசரியாக ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் ஆறு இலக்குகளைப் பெற்றுள்ளார். தலைசிறந்த பந்து வீச்சாளர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்[7].இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியத்தின் சிறந்த பந்துவீச்சாளர்களின் தரப்பட்டியலில் தேர்வுத் துடுப்பாட்டத்தின் சிறந்த பந்துவீச்சாளராக 1,711 நாட்கள் முதல் இடத்தில் நீடித்தார்.[8]
இவரின் துடுப்பாட்டக் காலங்களில் பல சர்ச்சையான நிகழ்வுகள் நடந்துள்ளன. இவரின் அதிநீட்டம் பந்து வீசும் முறையானது நடுவர்களாலும் (துடுப்பாட்டம்) துடுப்பாட்ட வாரியங்களினாலும் சந்தேகத்திற்கு உள்ளாக்கப்பட்டன.[9] பின் பலபரிசோதனைகளுக்குப் பிறகு 1996 மற்றும் 1999 ஆகிய ஆண்டுகளில் இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியம் இவரின் பந்து வீச்சு முறை சரியாக உள்ளதாகத் தெரிவித்து விளையாட அனுமதித்தது.[7]
பெப்ரவரி 2009 ஆம் ஆண்டில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம், தேர்வுத் துடுப்பாட்டம் ஆகிய இரண்டு துடுப்பாட்ட வடிவங்களையும் சேர்த்து அதிக இலக்குகளை வீழ்த்தியவர் என்ற சாதனையைப் படைத்தார். 2011 துடுப்பாட்ட உலகக்கோப்பையின் போது தனது ஓய்வினைப் பற்றி அறிவித்தார். அப்போது தான் மனதளவிலும் , உடல் அளவிலும் தகுதியுடன் இருப்பதாகவும், துடுப்பாட்டப் போட்டிகளை மகிழ்ச்சியுடன் விளையாடியதாகவும் இன்னும் விளையாடவேண்டும் போல இருப்பதாகவும் தெரிவித்தார். ஆனாலும் இந்த உலகக் கோப்பைப் போட்டியின் போதே ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டங்களில் இருந்து தான் ஓய்வு பெற விரும்புவதாகத் தெரிவித்தார்.[10] சூலை 18, 2010 ஆம் ஆண்டில் காலியில் நடைபெற்ற இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான முதல் போட்டியின் இறுதி நாளில் தனது ஓய்வினை அறிவித்தார்.[11] அந்தப் போட்டியின் போது 8 இலக்குகளை வீழ்த்தினார். பிரக்யான் ஓஜாவினை வீழ்த்திய பிறகு தேர்வுத் துடுப்பாட்டத்தில் 800 இலக்குகளை வீழ்த்தியவர் எனும் சாதனையைப் படைத்தார்.[12][13]
2004 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டத்தின் தூதுவராக இணைந்ததோடு வறுமை-எதிர்ப்பு திட்டமொன்றிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். 2004 ஆம் ஆண்டு ஆழிப்பேரலையில் இருந்து 20 நிமிடங்களில் உயிர் தப்பிய முரளிதரன் பின்னர் அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்தார்.[14].
இலங்கை துடுப்பாட்ட அணியில் விளையாடும் ஒரு சில தமிழர்களில் ஒருவரான முரளி 2005 ஆம் ஆண்டில் இந்தியரான மதிமலர் இராமானுதியைத் திருமணம் செய்து கொண்டார்[15].
ஆரம்ப வாழ்க்கை
[தொகு]சின்னசாமி முத்தையா, இலட்சுமி முத்தையா தம்பதிகளுக்கு மகனாக 1972 ஆம் ஆண்டு ஏப்ரல் 17-ல் முரளிதரன் பிறந்தார். சிறிதரன், பிரபாகரன், சசிகரன் என்ற மூன்று சகோதரர்கள் உள்ளனர். முரளிதரனின் தந்தை இலங்கையில் பிரபல பிஸ்கட் தயாரிக்கும் நிறுனவமான லக்கிலாண்ட் நிறுவனத்தின் உரிமையாளர் ஆவார். கண்டி புனித அந்தோனியார் கல்லூரியில் பாடசாலைக் கல்வியை பயின்ற முரளிதரன், பாடசாலை துடுப்பாட்ட அணியில் விளையாடி அதற்கு தலைமையும் தாங்கியிருந்தார். பாடசாலைக் காலத்தில் வேகப்பந்து வீச்சாளராக இருந்த முரளிதரன் அச்சமயம் பாடசாலை துடுப்பாட்ட அணியின் பயிற்றுனர் சுனில் பெர்னாண்டோவின் ஆலோசனைக்கேற்ப சுழற்பந்து வீச்சை தொடங்கினார். 1990 மற்றும் 1991 ஆண்டுகளில் இலங்கையின் பாட்டா நிறுவனம் வழங்கும் "பாட்டா ஆண்டின் சிறந்த பாடசாலை துடுப்பாட்ட வீரர்" என்ற விருதை பெற்றார். 1991ஆம் ஆண்டு தமிழ் யூனியன் துடுப்பாட்டக் கழகத்தில் இணைந்து தனது துடுப்பாட்ட வாழ்வை ஆரம்பித்தார்.[சான்று தேவை] முரளிதாரனின் தந்தைவழி தாத்தா பெரியசாமி சின்னசாமி 1920 ஆம் ஆண்டில் மத்திய இலங்கையின் தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்ய தென்னிந்தியாவிலிருந்து வந்தார்.[16] சின்னசாமி பின்னர் தனது மகள்களுடன் பிறந்த நாட்டுக்குத் திரும்பி இந்தியாவின் தமிழ்நாடு திருச்சிராப்பள்ளியில் குடியேறினார். இருப்பினும், முரளிதரனின் தந்தை முத்தையா உட்பட இவரது மகன்கள் இலங்கையில் தங்கியிருந்தனர்.[16]
இவருக்கு ஒன்பது வயதாக இருந்தபோது, முரளிதரன் கண்டியின் புனித ஆசிர்வாதப்பர் சபை துறவிகள் நடத்தும் ஒரு தனியார் பள்ளியில் சேர்ந்தார். இவர் ஒரு நடுத்தர விரைவு வீச்சாளராக தனது துடுப்பாட்ட வாழ்க்கையைத் தொடங்கினார். ஆனால் இவரது பள்ளி பயிற்சியாளர் சுனில் பெர்னாண்டோவின் ஆலோசனையின் பேரில், இவர் பதினான்கு வயதில் இருந்தபோது நேர்ச் சுழல் பந்துவீச்சாளராக ஆனார். இவர் பள்ளி லெவன் அணிக்காக நான்கு ஆண்டுகள் விளையாடினார். அந்த நாட்களில் இவர் பன்முக வீரராக விளையாடினார். பெரும்பாலும் நடுத்தர வரிசையில் மட்டையாடினார். செயின்ட் அந்தோனி கல்லூரியில் தனது இறுதி இரண்டு பருவகங்களில் நூறு இலக்குகளைக் கைப்பற்றினார். 1990/1 ஆம் ஆண்டில் ஆண்டின் சிறந்த துடுப்பாட்ட வீரர் என்று பெயரிடப்பட்டார்.[17]
பள்ளியை விட்டு வெளியேறிய பின்னர் இவர் தமிழ் யூனியன் துடுப்பாட்ட மற்றும் தடகள சங்கத்தில் சேர்ந்தார் மற்றும் 1991 ஆம் ஆண்டில் இலங்கைத் துடுப்பாட்ட அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. அந்தத் தொடரில் இவர் தேர்வு செய்யப்பட்டார். இவர் ஐந்து போட்டிகளில் விளையாடினார். ஆனால் ஒரு இலக்கையும் கைப்பற்றவில்லை. இலங்கைக்குத் திரும்பியபோது, ஆலன் பார்டரின் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஒரு பயிற்சி ஆட்டத்தில் விளையாடிய பின்னர் தொடரின் இரண்டாவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார்.[18]
ஜூலை 2004 ஆம் ஆண்டில் இவரது தாத்தா தனது 104 வயதில் இறந்தபோது, முரளிதரன் தனது இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக இந்திய சுற்றுப்பயணத்திலிருந்து வீடு திரும்பினார். முரளிதரன் அதிக தேர்வுத் துடுப்பாட்ட இலக்குகளை வீழ்த்தும் உலக சாதனை பார்க்க பெரியசாமி சின்னசாமி விரும்பினார். முரளிதரனின் பாட்டி ஒரு மாதத்திற்கு முன்பு தனது 97 வயதில் இறந்துவிட்டார். முரளிதரனின் மேலாளர் குஷில் குணசேகராவின் கூற்றுப்படி முரளியின் குடும்பம், குடும்ப உறவுகளில் நெருக்கமாக பிணைந்து ஒன்றுபட்டுள்ளது என்று கூறினார். அவர் மறைந்த தாத்தா முரளியுடன் ஒரு சிறந்த உறவினைக் கொண்டிருந்தார் எனக் குறிப்பிட்டார்." [19]
முரளிதரன் மார்ச் 21, 2005 அன்று சென்னையினைச் சேர்ந்த மதிமலர் ராமமூர்த்தி என்பவரை மணந்தார் .[16][16][20] இவர் மறைந்த டாக்டர் எஸ்.ராமமூர்த்தி மற்றும் இவரது மனைவி டாக்டர் நித்யா ராமமூர்த்தி ஆகியோரின் மகள் ஆவார்.[16] இவர்களின் முதல் குழந்தை, நரேன், ஜனவரி 2006 ஆம் ஆண்டில் பிறந்தார்.[21]
முத்தையா முரளிதரன் இந்தியாவின் வெளிநாட்டு குடியுரிமை (OCI) வைத்திருக்கிறார் [16] மேலும் இவருக்கு இந்தியாவிற்கு பயணம் செய்ய நுழைவுச் சீட்டு தேவையில்லை. இவரது மேலாளர் குஷில் குணசேகர கருத்துப்படி, முரளிதரன் இதற்கு தகுதியான நபர், ஏனெனில் இவரது குடும்பம் இந்தியாவில் இருந்துதான் வந்துள்ளது எனக் கூறினார்.[22] முத்தையா ஏப்ரல் 3, 2011 அன்று சர்வதேச துடுப்பாட்டப் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
துடுப்பாட்ட வீரராக
[தொகு]இலங்கை அணிக்காக 1992 ஆம் ஆண்டில் முதல் தேர்வுத் துடுப்பாட்ட போட்டியில் 1992 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கொழும்பு பிரேமதாச அரங்கில் விளையாடினார். தனது முதல் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட போட்டியை ஆகஸ்டு 12, 1993 ஆம் ஆண்டில் இந்திய அணிக்கு எதிராக கொழும்பு ஆர். பிரேமதாச அரங்கத்தில் விளையாடினார்.
துடுப்பாட்ட உலகின் விவிலியம் என வர்ணிக்கப்படும் விசுடன் துடுப்பாட்டாளர்களின் நாட்குறிப்பு சஞ்சிகை உலகின் தலைசிறந்த வீரராக முரளிதரனைத் தெரிவு செய்துள்ளது. இந்த விருது வழங்கும் முறை உருவாக்கப்பட்டு நான்காவது வீரராக இம்முறை முரளிதரன் விஸ்டன் சஞ்சிகையால் தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே, இந்த விருதுகளை இவுஸ்திரேலியாவின் றிக்கி பொன்டிங் மற்றும் ஷேன் வோர்ன், இங்கிலாந்தின் அன்றூ பிளின்டோவ் ஆகியோர் பெற்றுள்ளனர். 1992 ஆம் ஆண்டில் இலங்கை அணிக்கு விளையாடத் தொடங்கியதில் இருந்து இதுவரை 800 தேர்வு இலக்குகளையும் 500க்கும் அதிகமான ஒருநாள் இலக்குகளையும் வீழ்த்திச் சாதனை புரிந்துள்ளார். ஸ்டீவ் வா முத்தையா முரளிதரனை பந்து வீச்சின் டொன் பிறட்மன் என வர்ணித்துள்ளார்[23].
உலகசாதனைகளும் அடைவுகளும்
[தொகு]முத்தையா முரளிதரன் பல உலக சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்:
- தேர்வு மற்றும் ஒருநாள் ஆட்டங்களில் மொத்தமாக அதிகூடிய இலக்குகள் பெற்றவர் (1155 இலக்குகள் ஜூலை 14 2007இன் படி)[24]
- தேர்வு துடுப்பாட்டத்தில் போட்டியொன்றில் 10 இலக்குகளுக்கதிகமாக அதிக சந்தர்ப்பங்களில் பெற்றவர் (20).[25]
- தேர்வு துடுப்பாட்டத்தில் போட்டியொன்றில் ஐந்து இலக்குகளுக்கதிகமாக அதிக சந்தர்ப்பங்களில் பெற்றவர (60) [26]
- ஜிம் லேக்கர் (இங்கிலாந்து) மற்றும் முரளிதரன் மாதிரமே தேர்வு துடுப்பாட்டத்தில் சுற்று ஒன்றில் ஒன்பது இலக்குகளை இருமுறைப் பெற்றவர்களாவர்.
- தேர்வுதுடுப்பாட்ட நாடுகள் அனைத்திற்கும் எதிராக 50 இலக்குகளைப் பெற்ற ஒரே வீரர்.[27]
- தேர்வுதுடுப்பாட்ட நாடுகள் அனைத்திற்கும் எதிராக ஒரு போட்டியில் 10 இலக்குகளைப் பெற்ற ஒரே வீரர்.[28]
- வேகமான 350[29], 400[30], 450[31], 500[32], 550[33], 600[34], 650[35] மற்றும் 700[36] தேர்வு இலக்குகளைப் பெற்றவர்.
- நான்கு அடுத்தடுத்த தேர்வுப் போட்டிகளில் 10 இலக்குகளைப் பெற்ற ஒரே வீரர். முரளி இதனை இருமுறைச் செய்துள்ளார்.[37]
- தேர்வு துடுப்பாட்டத்தில் நேரடி ஆட்டமிழப்புகள் அதிகமாக கொண்ட வீரர். (153) [38][39]
- அதிக சாதகமான களத்தார்/பந்துவீச்சாளர் சோடி பிடி,மகெல ஜயவர்தனா - பந்து முரளி(63) [40]
புதிய தரவுகள் 12 பெப்ரவரி 2011 உள்ளபடி
[தொகு]துடுப்பாட்டம்
[தொகு]இதுவரை விளையாடியுள்ள உலகக் கிண்ணப் போட்டிகள்: 31
- விளையாடிய இனிங்ஸ்: 11
- ஆட்டமிழக்காமை: 4
- ஓட்டங்கள்: 62
- கூடிய ஓட்டம்: 16
- சராசரி: 8.85,
- 100கள்: 0,
- 50கள் :0,
இதுவரை விளையாடியுள்ள ஒருநாள் சர்வதேச போட்டிகள்: 341
- விளையாடிய இனிங்ஸ்: 160
- ஆட்டமிழக்காமை: 62
- ஓட்டங்கள் :667
- கூடிய ஓட்டம் 33 (ஆட்டமிழக்காமல்)
- சராசரி: 6.80
- 100 கள்: 0
- 50கள்: 0
இதுவரை விளையாடியுள்ள ஏ- தர போட்டிகள்: 444
- விளையாடிய இனிங்ஸ்: 203
- ஆட்டமிழக்காமை: 75
- ஓட்டங்கள்: 938
- கூடிய ஓட்டம்: 33(ஆட்டமிழக்காமல்)
- சராசரி: 7.32
- 100கள்: 0
- 50கள்: 0.
பந்து வீச்சு
[தொகு]இதுவரை விளையாடியுள்ள உலகக் கிண்ணப் போட்டிகள்: 31
- வீசிய பந்துகள் :1635
- கொடுத்த ஓட்டங்கள்:1044
- கைப்பற்றிய விக்கட்டுக்கள் :53
- சிறந்த பந்து வீச்சு: 4/19
- சராசரி: 19.69
- ஐந்து விக்கட்டுக்கள்: 0
இதுவரை விளையாடியுள்ள ஒருநாள் சர்வதேச போட்டிகள்: 341
- வீசிய பந்துகள் :18385
- கொடுத்த ஓட்டங்கள்:12035
- கைப்பற்றிய விக்கட்டுக்கள் :519
- சிறந்த பந்து வீச்சு: 7/30
- சராசரி: 23.18
- ஐந்து விக்கட்டுக்கள்: 10
இதுவரை விளையாடியுள்ள ஏ- தர போட்டிகள் போட்டிகள்: 444
- வீசிய பந்துகள் :23308
- கொடுத்த ஓட்டங்கள்:14979
- கைப்பற்றிய விக்கட்டுக்கள் :666
- சிறந்த பந்து வீச்சு: 7/30
- சராசரி: 22.49
- ஐந்து விக்கட்டுக்கள்: 12
ஆதாரங்கள்
[தொகு]- ↑ "ஷேன் வோர்னின் இலக்கை முரளி தாண்டினார்".
- ↑ "Muralitharan first Sri Lankan in ICC Hall of Fame". ICC Cricket. 27 July 2016. http://www.espncricinfo.com/ci-icc/content/story/1039767.html. பார்த்த நாள்: 27 July 2016.
- ↑ http://www.adaderana.lk/news.php?nid=43262
- ↑ "Murali breaks ODI wicket record". BBC Sport (London). 5 February 2009. http://news.bbc.co.uk/sport1/hi/cricket/7872333.stm. பார்த்த நாள்: 7 February 2009.
- ↑ "Murali breaks Warne's record". கிரிக்இன்ஃபோ. 3 December 2007. http://content-usa.cricinfo.com/slveng/content/current/story/323457.html. பார்த்த நாள்: 3 December 2007.
- ↑ "Muralitharan breaks the cricket test wicket record". YouTube. 3 December 2007. https://www.youtube.com/watch?v=XrniGZnLxZI. பார்த்த நாள்: 18 March 2008.
- ↑ 7.0 7.1 Austin, Charlie. "Muttiah Muralitharan profile at Cricinfo". http://content-aus.cricinfo.com/srilanka/content/player/49636.html. பார்த்த நாள்: 6 February 2008.
- ↑ "Murali retires in third position – The Express Tribune". Tribune.com.pk. பார்க்கப்பட்ட நாள் 1 April 2011.
- ↑ Conn, Malcolm (13 October 2007). "Bending law aided Murali: Gillespie". The Australian இம் மூலத்தில் இருந்து 27 டிசம்பர் 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20071227051004/http://www.theaustralian.news.com.au/story/0,25197,22577477-5001505,00.html. பார்த்த நாள்: 14 December 2007.
- ↑ "Murali wants to play till 2011 World Cup". The Hindu (Chennai, India). 10 November 2004 இம் மூலத்தில் இருந்து 8 நவம்பர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121108003607/http://www.hindu.com/2009/02/07/stories/2009020762132000.htm. பார்த்த நாள்: 9 February 2009.
- ↑ From correspondents in Colombo, Sri Lanka (6 July 2010). "Muralitharan to retire from Tests | Cricket". Fox Sports. பார்க்கப்பட்ட நாள் 1 April 2011.
- ↑ "Murali first man on earth to scale Mount-800". Zeenews.com. 22 சூலை 2010. Archived from the original on 25 சூலை 2010. பார்க்கப்பட்ட நாள் 22 சூலை 2010.
- ↑ "Muttiah Muralitharan's 800th wicket of his final Test match". YouTube. 22 July 2010. பார்க்கப்பட்ட நாள் 11 August 2012.
- ↑ [1]
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2005-08-31. பார்க்கப்பட்ட நாள் 2007-04-03.
- ↑ 16.0 16.1 16.2 16.3 16.4 16.5 .
- ↑ de Silva, A C (16 March 2008). "Murali won Observer Schoolboy Cricketer of the Year title in 1991". Sunday Observer இம் மூலத்தில் இருந்து 19 March 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080319224912/http://www.sundayobserver.lk/2008/03/16/spo01.asp. பார்த்த நாள்: 25 March 2008.
- ↑ "Heroes Muttiah Muralitharan Profile". http://ganeshyamalabittu.tripod.com/heroes/id19.html. பார்த்த நாள்: 12 February 2008.
- ↑ "Murali's grandfather's unfulfilled wish". 29 July 2004 இம் மூலத்தில் இருந்து 5 செப்டம்பர் 2004 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20040905235726/http://www.hindu.com/2004/07/29/stories/2004072902152100.htm. பார்த்த நாள்: 18 January 2008.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-01-08. பார்க்கப்பட்ட நாள் 2019-12-23.
- ↑ Lanka NewspapersWorld Cup to be Murali`s swansong? பரணிடப்பட்டது 27 செப்டெம்பர் 2007 at the வந்தவழி இயந்திரம்
- ↑ "Sri Lankan govt may issue special Murali stamp". Nation.com.pk. 7 August 2010. பார்க்கப்பட்ட நாள் 1 April 2011.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2010-09-16. பார்க்கப்பட்ட நாள் 2010-09-16.
- ↑ http://content-usa.cricinfo.com/srilanka/content/current/player/49636.html
- ↑ [2]
- ↑ [3]
- ↑ [4]
- ↑ [5]
- ↑ [6]
- ↑ [7]
- ↑ [8]
- ↑ [9]
- ↑ [10]
- ↑ [11]
- ↑ [12]
- ↑ Tests - Fastest to 700 Career Wickets
- ↑ [13]
- ↑ [14]
- ↑ Lynch, Steven (2005-07-11). "Most ODIs before a Test, and double figures all in a row". கிரிக்இன்ஃபோ. பார்க்கப்பட்ட நாள் 2007-01-04.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ [15]